எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி ஸ்டாலின்

தி.மு.கவின் சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், ‘திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 07ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் தி.மு.க. சட்டப்பேரவை கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின், துணைத் தலைவராக கே.என்.நேரு, கொறடாவாக எ.வ.வேலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், திமுக 59 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles