மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், நாட்டின் பொருளாதார நலன் கருதி தங்கம் வாங்குதை மக்கள் தவிர்க்கவேண்டும்.
பெற்றோல், டீசல் மற்றும் தங்கம் பயன்படுத்துவதில் பொதுமக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெலுங்கானாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச ரீதியில் நிலவும் எரிசக்தி நெருக்கடியைச் சுட்டிக்காட்டிய பிரதமர், பின்வரும் முக்கிய விடயங்களை வலியுறுத்தினார்:
இறக்குமதி செய்யப்படும் பெற்றோலியப் பொருட்களைத் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இது நாட்டின் அந்நியச் செலாவணியைச் சேமிப்பதோடு, போரினால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளைக் குறைக்கவும் உதவும்.
மெட்ரோ ரயில் வசதி உள்ள நகரங்களில் பொதுமக்கள் அதனை அதிகளவில் பயன்படுத்த முன்வர வேண்டும்.
போக்குவரத்தைக் குறைக்கும் நோக்கில், தனியார் நிறுவனங்கள் மீண்டும் ‘றுழசம கசழஅ ர்ழஅந’ முறையைச் செயல்படுத்த வேண்டும்.
நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை விளக்கிய பிரதமர், தங்கம் குறித்து உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்:
‘முன்பு போர் காலங்களில் மக்கள் தங்கத்தைத் தானமாக வழங்கினர். இன்று தானம் தேவையில்லை, ஆனால் அடுத்த ஒரு ஆண்டிற்கு அவசியமின்றி தங்கம் வாங்க மாட்டோம் என்ற உறுதிமொழியை ஒவ்வொரு குடிமகனும் ஏற்க வேண்டும்’.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள சூழலில், வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று பிரதமர் மோடி தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
