ரஜினி – கமல் இணையும் படத்தில் த்ரிஷா?

கமல் இணையும் படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி – கமல் இணைந்து நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியிடப்பட்டது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. ரஜினி மற்றும் கமல் ஆகியோருடன் தனித்தனியாக நாயகியாக நடித்துள்ளார் த்ரிஷா. நீண்ட வருடங்கள் கழித்து இருவரும் இணைந்து நடிக்கும் படத்தில் த்ரிஷா ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் படப்பிடிப்பு ‘ஜெயிலர் 2’ படம் வெளியானவுடன் தொடங்கவுள்ளது படக்குழு. இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘ஜெயிலர் 2’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன், த்ரிஷா ஒப்பந்தமாகியிருப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles