ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் – அமெரிக்கா இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய வேண்டுமென சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர்நிறுத்த அமைதி பேச்சுகளை முன்னெடுத்து நடத்திய பாகிஸ்தானின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, ஈரானிய துறைமுகங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க படைகள் தொடர்ந்து முற்றுகையிட்டு வந்தன.
இதனால்இ சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கியதால் பல்வேறு நாடுகள் எரிபொருள் தட்டுப்பாடால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தாருடன் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மே 12ஆம் திகதியான நேற்று தொலைபேசி மூலம் உரையாடினார்.
இதன்போது, ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாகத் திறப்பதற்கு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் மீண்டும் மத்தியஸ்தம் செய்ய வேண்டும். பாகிஸ்தான் அரசின் முயற்சிகளுக்கு சீனா ஆதரவளிக்கும் என்றும் வாங் யீ உறுதியளித்துள்ளார்.
