தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்மீது சி. பி. ஐ. விசாரணை நடத்தப்படலாம் என்று அ. தி. மு. க. தெரிவித்துள்ளது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட்டனர் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையிலேயே, அ. தி. மு. க. தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்மீது சி. பி. ஐ. விசாரணை நடத்தப்படலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஐ. இன்பதுரை தெரிவித்துள்ளார்.
முன்னர், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நரசிம்ம ராவ் குதிரை பேரத்தில் ஈடுபட்டார் என்று அவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
