ஈரானுக்கு எதிரான போரில் ஆளில்லா விமானங்கள், போர் விமானங்கள் உள்பட 42 விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளது என்று கூறப்படுகிறது.
ஈரானுக்கு எதிராக ‘ஒப்ரேஷன் எபிக் பியூரி’ என்ற பெயரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடுத்துள்ளன. இந்தத் தாக்குதலில் ஈரானின் உள்கட்டமைப்புகள் மற்றும் இராணுவ உபகரணங்கள் பெரும் சேதமடைந்தன.
ஈரானுக்கு எதிரான தாக்குதல் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் ஆய்வு சேவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 24 ஆளில்லா விமானங்கள், 7 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்கள், 4 எவ்-15, ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள், வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானம், தரைவழித் தாக்குதல் விமானம், ஹெலிகொப்டர், ட்ரைட்டன் ட்ரோன் என மொத்தம் 42 விமானங்கள் இழக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம், ஈரான் மீதான தாக்குதலுக்கான மதிப்பீட்டு செலவு 2 இலட்சத்து 80 ஆயிரம் கோடி டொலராக அதிகரித்துள்ளது என்றும் பென்ரகன் தெரிவித்துள்ளது.
