சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இந்த மாதம் 27ஆம் திகதி 70 கோடி டொலர் நிதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்சொன்னவாறு கூறினார்.
மேலும், ‘ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களுக்கு மேலதிகமாக வெளிநாட்டு நாணயத்தைப் பெற்றுக்கொள்வதில் இந்த 27ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதன் பணிப்பாளர் சபை நமக்கு 70 கோடி டொலர்களை வழங்கும் என நம்புகிறோம்.
அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இந்த வருடத்துக்குள் 48 கோடி டொலர் வரை பெற்றுக்கொள்ள முடியும். உலக வங்கியிடமிருந்து 15 கோடி டொலருக்கும் அதன் அணுக்க நிறுவனம் ஒன்றிடமிருந்து 5 கோடி டொலருக்கும் கிடைக்கவுள்ளன. எனவே, இதனை மேலாண்மை செய்வதில் எந்தவொரு சிக்கலும் ஏற்படாது – என்றும் கூறினார்.
