ஒரு கிராம் ஹெரோயினுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழியம்!

1.475 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்.

அத்துடன், ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணமும் தண்டப் பணத்தை செலுத்தத் தவறும்பட்சத்தில் மேலும் 12 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரும் எனவும் நீதிபதி ஏ. ஜி. அலெக்ஸ்ராஜா இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த 2020 ஜூன் மாதம் யாழ்ப்பாணம் நகரை அண்டிய பொம்மைவெளியில் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுசன் முன்னிலையாகியிருந்தார்.

இதேவேளை, கடந்த வாரமும் மேல் நீதிமன்றம் சுமார் 1.4 கிராம் போதைப்பொருளை வைத்திருந்தவருக்கு 7 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles