மே மாதத்தில் ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக இலங்கை ரூபாய் பதிவாகியுள்ளதாக சர்வதேச வர்த்தக ஊடகமான புளூம்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்நியச் செலாவணி சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் போக்கால் ரூபாயின் பெறுமதிக்கு இந்த கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இலங்கை ரூபாயின் திடீர் வீழ்ச்சிக்கு உள்நாட்டு இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வர்த்தக நடவடிக்கைகளே பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.
உள்நாட்டு இறக்குமதியாளர்கள் சந்தையில் அமெரிக்க டொலர்களை வாங்குவதைக் கணிசமாக அதிகரித்துள்ளனர்
நாட்டின் ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு நாணய வருவாயை உடனுக்குடன் இலங்கை ரூபாயாக மாற்றுவதைத் தவிர்த்துஇ காலதாமதம் செய்து வருகின்றனர்.
சந்தையில் டொலருக்கான தேவை அதிகரித்த போதிலும்இ அதற்கேற்ற விநியோகம் கிடைக்காததால் இந்த நாணய நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.
