எதிர்வரும் ஹஜ் பெருநாள், வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் உள்ள கைதிகள் தங்களின் உறவினர்களை சந்திக்க விசேட வாய்ப்பை சிறைச்சாலைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.
இதற்கமையஇ எதிர்வரும் மே 28, 30 ஆகிய இரு தினங்களிலும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த விசேட பார்வையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்த நாட்களில் கைதிகளைப் பார்ப்பதற்கு வரும் உறவினர்கள், அவர்களுக்கான உணவு, இனிப்புப் பண்டங்களைக் கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அவை ஒரு கைதிக்கு மாத்திரம் போதுமான அளவில் வழங்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த நடவடிக்கைகள் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்கவும் சிறைச்சாலை விதிகளுக்கு உட்பட்டும் முன்னெடுக்கப்படும் என்று சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடக பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
