இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான ‘ஆயா ஷேர்’ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக, இன்ஸ்டாகிராமில் இப்பாடலின் நடன அசைவுகளை மறு உருவாக்கம் செய்து பலரும் ரீல்ஸ் செய்தனர்.
இந்த நிலையில், யூடியூப்பில் தெலுங்கு பதிப்பு 150 மில்லியன் (15 கோடி) பார்வைகள், 1.6 மில்லியன் (16 லட்சம்) லைக்குகளைக் கடந்துள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற அனிருத்தின் இசைக்கச்சேரியில் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்ட நானி அனிருத் பாடப்பாட நடனமாடினார். இதுவும் வைரலானது.
இந்தப் படம் ஆக.21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
