தெனியாய பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டிருந்த மூளைக்காய்ச்சல் (மெனிங்ஜைடிஸ்) நோய் நிலை நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பதிவாகியுள்ளது. அதற்கமைய நோய் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு சகல பிரிவுகள் மற்றும் நிறுவனங்களுக்கு விசேட ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
கடும் காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற நோய் நிலைமையுடன் தெனியாய பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் சிலர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் மூளைக்காய்ச்சல் நோய் நிலைமை அந்த மாணவர்கள் மத்தியில் பரவலடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, நோய் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக அந்த பகுதியிலுள்ள பல பாடசாலைகளை சில தினங்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மூளைக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தியதலாவ, வெலிமடை மற்றும் ரிகில்லகஸ்கட வைத்தியசாலைகளில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்படுவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
தியத்தலாவையில் 28 நோயாளர்களும் வெலிமடை வைத்தியசாலையில் 13 நோயாளர்களும் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் 25 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதான தொற்று நோய் விஞ்ஞான தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.
இந்த மெனிங்ஜைடிஸ் நோய் நிலைமை பாடசாலை மற்றும் அதிக மக்கள் ஒன்று கூடும் இடங்களில் பரவலடைந்து வருவதாகவும் சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நோய் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் சகல பிரிவுகள், நிறுவனங்களுக்கு விசேட ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நோய் நிலைமையின் பிரதான நோய் அறிகுறி கடும் காய்ச்சல், தலைவலி, வாந்தி என்பனவாகும். இது ஏழு நாட்களில் குணமாகும் என்று அந்த ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நீர் மற்றும் உணவினூடாக இந்த நோய் நிலைமை தொற்றுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நோயாளியின் எச்சில் அல்லது சளியினூடாக வெளியேறும் குமிழிகளினூடாக அருகிலுள்ளவரின் சுவாச வாயிலினூடாக இந்த நோய் தொற்று ஏற்படக் கூடும். இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகி 37 நாட்களில் நோய் அறிகுறிகள் தென்படும் என சுகாதார அமைச்சின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த நோயினால் இதுவரையில் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் சமூக நல விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா தெரிவித்துள்ளார்.
