மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் தீவிரம்

அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் பரஸ்பர வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவிய டிரோன்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதுடன், குவைத்தில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஈரானுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் முன்னேற்றம் காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். அதேவேளை, ஹோர்முஸ் நீரிணையில் சுங்கக் கட்டணம் விதிக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என ஓமனை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

மற்றொரு புறம், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதுடன், வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 14 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதேநேரம், துருக்கியின் கருங்கடல் பகுதியில் ரஷ்ய எண்ணெய் கப்பல்களை குறிவைத்து டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மேற்கத்திய தடைகளை மீறி ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்ட கப்பல்களே தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles