தற்போது விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எவ். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
வெசாக் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெசாக் வாரத்தில் கலாசாரத்துக்குப் பொருத்தமற்ற வகையில் நடந்துகொள்ளும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார் நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் ஒன்றையும், அதேபோன்று போக்குவரத்துத் திட்டம் ஒன்றையும் தற்போது தயார் செய்துள்ளனர்.
இந்த முறையும் நாம் முக்கியமாகப் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறோம், ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும், குறிப்பாகத் தன்சல்கள் மற்றும் வெசாக் வலயங்களை மையப்படுத்தி சிவில் உடையில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களும், புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களும் பாதுகாப்பிற்காக இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
