முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய வீட்டு வசதி அதிகார சபையால் காணி வழங்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறும் ஏழைக் குடும்பம் ஒன்றுக்கே அந்த சபையால் காணி வழங்க முடியும். மகிந்த ராஜபக்ஷ ஏழை என்று நான் நினைக்கவில்லை – இவ்வாறு ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்லே கூறியுள்ளார்.
கடந்த 1999ஆம் ஆண்டில் அப்போதைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஒரு ஏக்கர் அரச நிலம் வழங்கப்பட்டுள்ளது. அவர் ஒன்றும் காணி இல்லாத, குறைந்த வருமானம் பெறும் ஏழை என்று நான் நினைக்கவில்லை.
இதேபோன்று, மகிந்தவின் மனைவிக்கும் அவர்களின் ஆட்சிக் காலத்தில் பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி ‘கார்டன் மொண்டிசோரி’ என்று கூறப்படும் இடத்தில் பெறுமதிமிக்க காணி வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட நிலத்தைவிட அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்களின் நிலங்களும் அவர்களால் அடாத்தாகப் பிடிக்கப்பட்டன.
இதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முறைகேடாக அரச காணியைப் பெற்றுள்ளார் என்றும் அவர் மேலும் கூறினார்.
