முதல்முறையாக இந்திய முப்படைத் தளபதியாக தமிழரான ராஜா சுப்பிரமணி நியமனம்!

இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என்.எஸ் ராஜா சுப்பிரமணி இன்று ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

முப்படை தலைமைத் தளபதியாகப் பதவி வகித்த ஜெனரல் அனில் சௌஹான் நேற்று சனிக்கிழமையுடன் (மே 30) ஓய்வு பெற்றார். இந்த நிலையில், இன்று முப்படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது –

“நமது பாதுகாப்புப் படைகள் நமது தேச நலன்களைப் பாதுகாப்பதில் செயலாற்றுத் திறனுடன் திகழ்வதாகவும் நமது நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளதாகவும்” குறிப்பிட்டார்.

மேலும், அவர், “பாதுகாப்பு படைகள் அர்ப்பணிப்புடனும் துணிச்சலுடனும் மாண்புடனும் நாட்டுக்கு சேவையாற்றும் என்று இந்தியக் குடிமக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்றார்.

கடந்தாண்டில் ஜூலையுடன் ராணுவ துணை தலைமைத் தளபதியாக இருந்து பணி ஓய்வு பெற்ற ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ராணுவத்தில் பல உயர் பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பல்வேறு முக்கியப் படைப்பிரிவுகளை வழிநடத்தி நீண்ட ராணுவ அனுபவம் கொண்டவர். தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் (என்.எஸ்.சி.எஸ்.) ராணுவ ஆலோசகராக இருந்த நிலையில், இந்தியாவின் 3ஆவது முப்படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முப்படைத் தலைமைத் தளபதி பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles