பிரான்ஸ் முழுவதும் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்தார். 219 பேர் காயமடைந்துள்ளனர்.
பாரிஸ் சென் ஜெர்மைன் அணி சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றதைத் தொடர்ந்து இந்த வன்முறை வெடித்தது.
காயமடைந்தவர்களில் எட்டு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 57 பொலிஸாரும் காயமடைந்துள்ளனர்.
வன்முறை தொடர்பில் 780 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 450-க்கும் மேற்பட்டோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாரிஸpன் வீதியில் 24வயதுடைய ஒருவர் உயிரிழந்தார். இதேவேளை, வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், கடைகள் சேதப்படுத்தப்பட்டன என்று தெரிவிக்கப்படுகிறது.
பாரிஸ் சென் ஜெர்மைன் அணியின் வெற்றி அணிவகுப்பை முன்னிட்டு, ஈபிள் கோபுரம் பகுதியைச் சுற்றி ஆயிரக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
