போர் நிறுத்தத்தை மீறி லெபனானுக்குள் மேலும் முன்னேறும் இஸ்ரேல்!

தெற்கு லெபனானின் முக்கிய நகரமான நபாத்தியேயின் புறநகர்ப் பகுதிகளை இஸ்ரேல் படைகள் அடைந்துள்ளன. அத்துடன், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பியூஃபோர்ட் கோட்டையையும் கைப்பற்றியுள்ளன.

ஏப்ரல் மாதம் முதல் நடைமுறையிலுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்தும் நடைமுறையில் இருந்தாலும் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகிறது.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் லெபனானுக்குள் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள ஆழமான ஊடுருவலாக இது கருதப்படுகிறது. தற்போது சுமார் 2இ000 சதுர கிலோமீற்றர் லெபனான் நிலப்பரப்பை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

ஆரம்பத்தில் லிடானி ஆற்றின் தெற்குப் பகுதியில் இருந்து ஹிஸ்புல்லா போராளிகளை அகற்றுவதே நோக்கம் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. எனினும்இ தற்போது லிடானி ஆற்றைத் தாண்டி மேலும் வடக்கே ஜஹ்ரானி ஆறு வரையிலும் மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நபாத்தியே நகரை அண்மித்த சௌதார் அல்-ஷர்கியா மற்றும் சௌகீன் பகுதிகளையும் இஸ்ரேல் படைகள் அடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும்இ டெய்ர் எஸ்-ஜஹ்ரானி பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பலர் உயிரிழந்தனர் என்றும் லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles