மலேசியாவின் ஜோகூர், சிம்பாங் ரெங்கம் சிறைச்சாலைக்கு அருகே இன்று மதியம் ஐந்து வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட கோர விபத்தில், 10 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று மதியம் 1:16 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் பெரோடுவா அல்சா (Perodua Alza), புரோட்டான் வீரா (Proton Wira), மெர்சிடிஸ் பென்ஸ் E240 (Mercedes-Benz E240), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் டொயோட்டா வயோஸ் (Toyota Vios) ஆகிய ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்டிருந்தன என்று, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி இஸ்மாயில் மாமட் கூறினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், வாகனங்களுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த முழுமையான மற்றும் விரிவான விவரங்களை அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இச்சம்பவம் குறித்து பொலிஸா் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
