செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் தாயத்துடன் எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் பாகம் இன்று ஜூன் முதலாம் திகதி நடைபெற்றது.
இதன்போது, ஒரு மனித எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டது. இதன்மூலம், அங்கு அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கை 262 ஆக அதிகரித்துள்ளது. அடையாளம் காணப்பட்டவற்றில் 260 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
எனினும், இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூட்டில் காசு போன்ற தாயத்து ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது என்று சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் தெரிவித்திருந்தார்.
நாளை செவ்வாய்க்கிழமையும் அகழ்வுப் பணிகள் நடைபெறும்.
இன்றைய அகழ்வுப் பணிகள் நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றன. ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் அகழ்வில் ஈபட்டனர். இதன்போது, சட்ட மருத்துவ அதிகாரி பிரணவனும் அங்கு பிரசன்னமாகியிருந்தார்.
