பொதுமக்களும் இனி பிக் பொஸ் நிகழ்வில் பங்கேற்கலாம்!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பொஸ் கொமன்மான் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

பிக் பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் பிக் பொஸ்கொமன்மான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றால், நேரடியாக பிக் பொஸ் நிகழ்ச்சியில் 100 நாள்கள் போட்டியில் பங்கேற்கலாம்.

விஜய் தொலைக்காட்சியில் பிக் பொஸ் நிகழ்ச்சி 9 சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாள் போட்டியையும், ஒவ்வொரு போட்டியாளரையும் பார்வையாளர்கள் நன்கு கவனிப்பதால், போட்டி குறித்த புரிதல் பொதுமக்களில் பலருக்கு ஏற்பட்டிருக்கும்.

போட்டியை நன்கு புரிந்துகொண்ட பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக, பிக் பொஸ் கொமன்மான் என்ற புதிய நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் vijay.jiostar.com என்ற தளத்தில் உங்களில் சுய விவரங்களையும், ஏன் பிக் பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தையும் 2 நிமிட வீடியோவாகப் பதிவு செய்ய வேண்டும்.

இதில் தகுதியானவர்கள் நிகழ்ச்சிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பொஸ் நிகழ்ச்சியை வெளியில் இருந்து பார்த்தவர்கள், இனிமேல் விளையாடலாம் என நடிகரும் இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருமான விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முன்னோட்ட வீடியோ வெளியாகி பலரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles