லலித், குகன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் மெய்நிகர் வழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மனித உரிமைகள் செயல்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011 டிசெம்பர் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்த போராட்டங்களை ஒழுங்கமைத்த இவர்கள், அரச புலனாய்வுப் பிரிவினராலும் இராணுவத்தினராலும் கடத்தப்பட்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட பலர்மீது குற்றம் சாட்டப்பட்டு, இது தொடர்பான வழக்குகள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக நேரில் யாழ்ப்பாணம் வருவதற்கு கோட்டாபய ராஜபக்ஷ மறுத்து வருகிறார்.
இந்நிலையில் மெய்நிகர் வழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
