அமெரிக்காவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 10 ரி.எச்.-57 சீ ரேஞ்சர் ஹெலிகொப்டர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நாட்டை வந்தடைந்தன.
இலங்கை – அமெரிக்கா இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பில் இது முக்கிய மைல்கல்லாக அமைவகிறது. இந்த விமானங்கள் விமானப் படையின் செயல்பாட்டு மற்றும் பயிற்சி திறன்களை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த ஹெலிகாப்டர்கள் இரத்மலானை விமானப் படைத் தளத்தில் தொழில்நுட்ப பரிசோதனைகள் மற்றும் தயாரிப்பு பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
தேவையான ஆய்வுகள், ஏற்றுக்கொள்ளும் நடைமுறைகள் மற்றும் சோதனைப் பறப்புகள் நிறைவடைந்த பின்னர் அவை சேவையில் இணைக்கப்படவுள்ளன.
