அரிய வட்ட வடிவ முட்டையை வாங்கிய சிங்கப்பூர் குடும்பம்

சிங்கப்பூரில் வாரந்தோறும் மளிகைப்பொருள்களை வாங்கச் செல்லும் குடும்பம் ஒன்று, தான் வாங்கிய பொருள்களில் அரிய வடிவிலான முட்டை ஒன்று இருந்ததைக் கண்டு ஆனந்தமடைந்தது.

வழக்கமாக முட்டை நீள்வட்ட வடிவில் இருக்கும். ஆனால், அவர்கள் வாங்கிய முட்டைகளில் ஒன்று மட்டும் கோள வடிவில் வட்டமாக இருந்தது.

அதனை வாங்கிய விராஜ் ஸ்வரூப் மற்றும் அவரது மனைவி ஷர்மிஸ்டா நகார்கட்டி வியப்படைந்தனர். வழக்கத்திற்கு மாறான முட்டை வடிவத்தைக் கண்டு தங்களது 8 வயது மற்றும் 11 வயது குழந்தைகள் பரவசமடைந்ததாக அந்தத் தம்பதியினர் கூறினர்.

சிங்கப்பூரில் உள்ள ‘சியூ’ஸ் அக்ரிகல்சர்’ நிறுவனத்தின் தயாரிப்பான அந்த முட்டையை ஹவ்காங் அவென்யூ 1இல் உள்ள என்டியுசி கிளையில் அவர்கள் மே 27ஆம் திகதி வாங்கியிருந்தனர்.

வித்தியாசமான அந்த முட்டையின் மதிப்பு பற்றி மறுநாள் தமது மனைவி கூகுளில் தேடும் வரை தங்களுக்குத் தெரியவில்லை என்றார் விராஜ்.

அந்த முட்டையின் அருமை பற்றி தமது மனைவி கண்டுபிடித்திருக்காவிட்டால் அதனை இந்நேரம் சமைத்திருப்போம் என்று கூறினார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles