செம்மணி புதைகுழியில் இன்றும் 8 எலும்புக் கூடுகள் அடையாளம்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று வியாழக்கிழமை புதிதாக 08 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புக்கூட்டு தொகுதியில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வு பணியின் 16ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று வியாழக்கிழமை நடைபெற்றன.

அதன்போது 08 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டில் 07 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 283 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 279 என்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles