புதிய ராஜகோபுரத்துடன் குடமுழுக்கு காணும் சிங்கப்பூர் ஸ்ரீமஹா மாரியம்மன் ஆலயம்

சிங்கப்பூரின் யீஷூனில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் குடமுழுக்கை ஒட்டி 29 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி ஆலயத்தில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம் குடமுழுக்கில் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

அவருடன் மனிதவள, கலாசார, சமூக, இளையர்துறைத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸும் கலந்துகொள்கிறார்.

சுமார் 8,000 முதல் 10,000 பக்தர்கள் குடமுழுக்கு நிகழ்வில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்ப்பதாக ஆலய நிர்வாகம் சொன்னது.

கிட்டத்தட்ட ஈராண்டு காலமாக ஆலயத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.

ஆலயத்தின் தனிச்சிறப்பான தங்க நிறத் தோற்றமும் பராமரிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகக் குழுத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles