ஐரோப்பிய ஒன்றியம் முதன் முறையாக புதிய ‘நடமாட்ட சுதந்திர தடை’ முறையை பயன்படுத்தி ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரத் தலைவர் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் கடல் போக்குவரத்தை கட்டுப்படுத்தியதாகக் கூறப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஈரானை இலக்காக கொண்டு புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அவர் தனது எக்ஸ் தளப் பதிவில்,
‘மத்திய கிழக்கு பகுதி ஏற்கனவே அமைதி பேச்சுகளுக்கும் தற்காலிக போர் நிறுத்தங்களுக்கும் இடையில் சிக்கியுள்ளது. இதே நேரத்தில் ஈரானின் ட்ரோன்கள் ஹோர்முஸ் நீரிணையில் கடல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது – என்று குற்றஞ்சாட்டினார்.
இதற்குப் பதிலாகஇ பிரஸல்ஸில் நடந்த கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகள் சில ஈரானிய நபர்களுக்கும் அமைப்புகளுக்கும் தடை விதித்துள்ளன. இதில் ஈரானின் புரட்சிகர காவல்படையின் கடற்படை பிரிவு தொடர்பான பேச்சாளர் மொஹம்மத் அக்பர்சாதேவும்இ ஈரான் எண்ணெய் ஏற்றுமதியாளர் சங்கத்தின் பிரதிநிதி ஹமித் ஹொசைனியும் உள்ளடங்குகின்றனர். இவர்களின் சொத்துகள் முடக்கம் செய்யப்படுவதுடன், வீசா தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இது ‘கடல் வழிச் சுதந்திரத்தை பாதுகாக்கும் புதிய தடைகள் கட்டமைப்பின்’ கீழ் முதல் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளனர்.
