நான்கு ஊழல் வழக்குகளில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட சரண குணவர்த்தனவுக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது கொழும்பு மேல் நீதிமன்றம்.
அத்துடன், அவருக்கு 18 இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல்.
சரண குணவர்த்தன 2006ஆம் ஆண்டு தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றினார். அந்தக்காலத்தில் அந்த நிறுவனத்துக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களை பெற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தினார் என்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அவருக்கு எதிராக நான்கு வழக்குகளை தொடுத்திருந்தது.
இந்த வழக்குகளில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட நிலையில் ஒவ்வொரு வழக்குக்கும் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
