செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய தினம் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. இதேநேரம், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 7 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
இதன் அடிப்படையில், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 353 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், 334 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு நீதிமன்றின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை 23ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
