யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் பாடசாலை மாணவர்கள் பயணித்த வானும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இன்று திங்கட்கிழமை பிற்பகல் சுமார் 2 மணியளவில், கட்டுகஸ்தோட்டை – கலுகல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் எதிர்திசையில் வந்த பாடசாலை வானும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றோடொன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில், 17 பாடசாலை மாணவர்களும் வான் சாரதியும் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக கட்டுகஸ்தோட்டை ஆதார வைத்தியசாலை மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
