“என்னுடன் புகைப்படம் எடுக்க மெலோனி கெஞ்சினார்” – ட்ரம்பின் கூற்றுக்கு இத்தாலி கண்டனம்

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, தன்னுடன் புகைப்படம் எடுக்க கெஞ்சினார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியமைக்கு இத்தாலி அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அளித்த பேட்டியில், பிரான்ஸ் நாட்டில் நடந்து முடிந்த ஜி7 மாநாட்டில் இத்தாலி பிரதமர் மெலோனி தன்னுடன் புகைப்படம் எடுக்க வேண்டி கெஞ்சினார் என கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நீண்டகால கூட்டாளியான இத்தாலியின் பிரதமர் குறித்த ட்ரம்ப்பின் இந்தப் பேச்சுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ட்ரம்பின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிடப்பட்டிருந்த தனது அமெரிக்க பயணத்தை இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி ரத்து செய்துள்ளார்.

இந்த நிலையில், ட்ரம்ப்பின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ள இத்தாலி பிரதமர் மெலோனி, நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்சமாட்டோம் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “டொனால்ட் ட்ரம்ப்பின் பேச்சுக்கள் முற்றிலும் புனையப்பட்டவை. நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்துள்ளேன். அமெரிக்காவின் அதிபர் தனது நட்பு நாடுகளுடன் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என எனக்குத் தெரியவில்லை.”

“மேலும், இது முதல்முறை நடப்பதும் அல்ல. மேற்குலக நாடுகள் மற்றும் அமெரிக்காவின் எதிரிகளுக்கு எதிராக அவர் இதுபோன்ற உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.”

“அதற்கு மாறாக, சில தலைவர்களுடன் அவர் இணக்கமான நடைமுறையையே கடைப்பிடிக்கிறார். ஆனால், ஒன்றை அவர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்: இத்தாலியும் நானும் எதற்கும் கெஞ்சமாட்டோம்” – எனக் கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles