ஜப்பானில் இன்று அதிகாலை 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது,
இந்த நிலநடுக்கம் வடக்கு இவாடே பகுதிக்கு அப்பால் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் மையப்புள்ளி 50 கி.மீற்றர் ஆழத்தில் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
அதேநேரம் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
