சுவிற்ஸர்லாந்தில் வேகமாக உருகும் பனிப்பாறை

ஐரோப்பாவைத் தாக்கிவரும் வெப்ப அலை காரணமாக, சுவிற்ஸர்லாந்தில் பனிப்பாறைகள் வேகமாக உருகும் வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டின் பனிப்பாறை கண்காணிப்பு அமைப்பின் (GLAMOS) தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த குளிர்காலத்தில் குவிக்கப்பட்ட பனியும் பனிக்கட்டியும் ஜூன் 22-ஆம் திகதிக்குள் முழுமையாக உருகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜுன் முதல் அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் வெப்பநிலை இதே அளவில் தொடருமாயின் சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகளின் அளவு சுருங்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இடம்பெற்றதாகவும் அவ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சுவிட்ஸர்லாந்திலும் வெப்பநிலை சாதனை அளவு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles