ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணித்துக் கொண்டிருந்த பிரித்தானியாவுக்குச் சொந்தமான எரிபொருள் போக்குவரத்து கப்பல் மீது இன்று (27) அடையாளம் தெரியாத தரப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலில் கப்பலுக்கு சிறியளவு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் இருந்த பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னரும் இதே கடற்பகுதியில் சிங்கப்பூருக்குச் சொந்தமான எரிபொருள் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஈரானில் சில இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
