டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள இலங்கை,, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டறிந்து அழிப்பதற்காக, இராணுவத்தின் டிரோன்களை களமிறக்கியுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும், கிட்டத்தட்ட 51,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர், 31 பேர்உயிரிழந்துள்ளனர்.
டெங்கு வைரஸைப் பரப்பும் நுளம்புகளின் வாழ்விடங்களை கண்டுபிடித்து அவற்றைக் கட்டுப்படுத்த இராணுவத்தின் கருவிகளைப் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை ஒழிப்பதை நோக்கமாக கொண்ட, நாடு தழுவிய மூன்று நாள் டெங்கு தடுப்புப் பரப்புரையின் ஒரு பகுதியாகவே இந்த டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
