உக்ரைன் மீது டிரோன் தாக்குதல் – 8 பேர் உயிரிழப்பு

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் மீது நேற்று இரவு ரஷ்ய இராணுவம் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 34 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நகரின் 28 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பொது கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, உக்ரைன் இராணுவம் சமீபத்தில் ரஷ்யாவிற்குள் புகுந்து அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட பெரிய பெற்றோல், டீசல் தயாரிக்கும் தொழிற்சாலைகளைத் குண்டு வீசி தகர்த்துள்ளது.

இதனால், உலகிற்கே பெட்ரோல் கொடுக்கும் வல்லமை படைத்த ரஷ்யாவில் இப்போது வரலாறு காணாத பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous article
Next article

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles