வடகொரிய ஜனாதிபதி அதிநவீன போர்க்கப்பலில் ஆய்வு

வடகொரியாவின் ‘காங்கோன்’அதிநவீன போர்க்கப்பலில் ஜனாதிபதி கிம் ஜோங் உன் நேரில் சென்று ஆய்வு நடத்தியதுடன், அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய அதிநவீன குரூஸ் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகளின் சோதனை ஓட்டங்களை அவர் நேரில் பார்வையிட்டுள்ளார்.

சர்வதேச நாடுகளின் கடுமையான தடைகளையும் மீறி, வடகொரியா தனது அணு ஆயுத உற்பத்தியையும் இராணுவக் கட்டமைப்பையும் தீவிரமாக அதிகரித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, அடுத்த 5 ஆண்டுகளில் ஏவுகணைகளின் உற்பத்தியை 2.5 மடங்கு உயர்த்த அந்நாட்டு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், வடகொரிய கடற்படையை முழுமையாக அணு ஆயுதமயமாக மாற்றும் நோக்கில் அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்கும் பணிகள் அங்கு முடக்கிவிடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கடந்த ஆண்டு எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய வடகொரிய கடற்படைக்கு சொந்தமான, சுமார் 5,000தொன் எடையுள்ள காங்கோன்” போர்க்கப்பலை பழுதுபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

தற்போது இப்பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து, அந்தப் போர்க்கப்பல் மீண்டும் கடலில் இறக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, இந்த அதிநவீன போர்க்கப்பலை அடுத்த 2 மாதங்களுக்குள் முழுமையான இராணுவப் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கிம் ஜாங் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை கொரிய தீபகற்ப பகுதியில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles