ஈரானின் 300 இற்கு மேற்பட்ட ராணுவ இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணைப்பில் சைப்ரஸ் நாட்டின் கொடியுடன் சென்ற வணிகக் கப்பல் மீது ஈரான் படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள சுமார் 140 இராணுவ இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி முடித்துள்ளது.

இந்த வாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய மூன்றாவது சுற்று தாக்குதல் இதுவாகும் என அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.

ஈரானியப் படைகளின் தாக்குதல் திறனை முடக்கும் நோக்கில் நடத்தப்பட்ட தாக்குதலில்
ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள், கடற்படைத் தளங்கள் மற்றும் படகுகள், ஆயுதக் கிடங்குகள் (Ammunition storage facilities), தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள், கடற்கரைக் கண்காணிப்பு மையங்கள் துல்லியமாகத் தாக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் குறிப்பிட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணைப்பு வழியாகப் பயணிக்கும் சிவிலியன் மாலுமிகள் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் வகையில் இந்த வாரத்தில் மட்டும் மூன்று இரவுகளாக 300-க்கும் மேற்பட்ட ஈரானிய இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளன என அமெரிக்க மத்திய கட்டளையகம் மேலும் கூறியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles