பிரித்தானியாவில் நீண்டகாலமாக இயங்கிவந்த நீராவி ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
குறித்த ரயில்கள் காட்டுத்தீயை ஏற்படுத்தும் என்ற அச்சத்தின் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரி பொட்டர் ரயில் என்று அழைக்கப்படும் வெஸ்ட் கோஸ்ட் ரயில்வேயின் ரயில் ஒன்று காட்டுத்தீயை ஏற்படுத்தியதாக நம்பப்படுகின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இந்த ஆண்டு 342 காட்டுத்தீ சம்பவங்களுக்குப் பதிலளித்துள்ளன.
மேலும், இங்கிலாந்தில் தீவிர வானிலை நிகழ்வுகள் புதிய நிலைக்கு மாறி வருவதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
