ஈரான் சிறையில் வாடும் பிரித்தானிய தம்பதியினர் – தண்ணீர் மட்டுமே அருந்தி வாழ்வதாக தகவல்

பிரித்தானிய தம்பதிகளான லிண்ட்சே (Lindsay) மற்றும் கிரேக் ஃபோர்மேன் (Craig Foreman) ஆகியோர் ஈரானின் எவின் சிறையில் நீண்டகால உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உளவு பார்த்த குற்றத்திற்காக அவர்களக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அந்த தண்டனையை மறுத்து வருகின்றனர்.

லிண்ட்சே 66 நாட்களாகவும், கிரேக் 75 நாட்களாகவும் உணவருந்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் தற்போது தண்ணீரை மட்டுமே அருந்தி உயிர் வாழ்வதோடு, கடுமையான உடல்நலச் சீர்கேட்டையும் சந்தித்துள்ளனர்.

பத்திரிகையாளர்களிடம் பேசியதற்காக கிரேக் ஃபோர்மேனின்(Craig Foreman) தண்டனை மேலும் இரண்டு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பிரதிநிதி அல்லது மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதால், அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்த கவலைகள் மேலும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள், அவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியுள்ளனர். அரசு பணயக்கைதிகளைப் பிடிப்பது குறித்து ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தியதோடு, அவர்களின் உண்ணாவிரதம் ஒரு முக்கியமான ‘மருத்துவ அவசர’ நிலையை எட்டியுள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே குறித்த இருவரையும் மீட்பதற்காக பிரித்தானியாவின் புதிய பிரதமர் அண்டி பர்ன்ஹாம் மற்றும் வெளியுறவுச் செயலாளர் எட் மிலிபான்ட் ஆகியோரிடம் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles