யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சாவில் 16 கிலோ சிக்கியது!

யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்டுள்ள 250 கிலோ கிராம் கேரளக் கஞ்சாவில் 16 கிலோ கிராம் கேரளக் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து வல்லிபுரம் கடற்கரை பகுதி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு 250 கிலோ கேரளக் கஞ்சா கடந்த வாரம் கடத்தி வரப்பட்டுள்ளதாக புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பிரகாரம் பொலிஸார் தீவிர விசாரணைகளிலும் வடமராட்சிப் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லியடிப் பகுதியில் உள்ள பற்றைக்காடுகளுக்குள் கஞ்சாப் பொதி காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் அதனை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பொதி 16 கிலோ கிராம் எனவும், அவற்றின் பெறுமதி சுமார் 20 இலட்ச ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சாவை சிறு சிறு பொதிகளாக வடமராட்சிப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளுக்கு கடத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பில் பொலிஸார் தீவிர கண்காணிப்பிலும், விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளதாகவும், அது தொடர்பிலான தகவல்கள் அறிந்தவர்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles