புங்குடுதீவில் பனை வெட்டச் சென்றபோது கருங்குளவிக் கொட்டுக்கு இலக்கான 67 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று புங்குடுதீவு காட்டுப் பகுதிக்குள் பனை வெட்டும் பணிக்காகச் சென்றிருந்த வேளையில், கருங்குளவிக் கூட்டம் அவரைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
