சிங்கப்பூரில் சிறுமிகள் இருவரை பாலியல் சேவைக்கு உட்படுதிய 9 பேர் கைது

சிங்கப்பூரில் இரு சிறுமிகளை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்திய சந்தேகத்தில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் பெண். அனைவரும் 20 வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

இரு சிறுமிகளும் 18 வயதுக்குக் குறைவானவர்கள்.

முதற்கட்ட விசாரணையில் 20 வயதுப் பெண் ஒருவர் லாபம் ஈட்டுவதற்காக இரு சிறுமிகளையும் பாலியல் சேவைக்கு உட்படுத்தினார் தெரியவந்தது.

அனைவரின் அடையாளமும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் ஆபாசப் பதிவுகளை வைத்திருந்தனர் என குற்றஞ்சாட்டப்பட்டனர்.

பாலியல் நடவடிக்கைகளில் ஒருவரை உட்படுத்தி அதன்மூலம் லாபம் ஈட்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் 100,000 வெள்ளி வரை அபராதம், அதிகபட்சம் 10 ஆண்டுச் சிறை, அதிகபட்சம் ஆறு பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களிடமிருந்து பாலியல் சேவை பெற்றால் அதிகபட்சம் ஏழாண்டுச் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஆபாசப் பதிவுகளை வைத்திருந்தது நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20,000 வெள்ளி அபராதம், அதிகபட்சம் 6 மாதச் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles