சிங்கப்பூரில் பேருந்துக்கு அடியில் சிக்கி பெண் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது

சிங்கப்பூரின் பூகிஸ் வட்டாரத்திலுள்ள குவீன் ஸ்திரீட் பேருந்து முனையத்தில் நிகழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அந்த விபத்தின் தொடர்பில் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

நேற்றுயு செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் அந்த விபத்துத் தொடர்பான தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், பேருந்து ஒன்றின் அடியில் சிக்கிய நிலையில் காணப்பட்டார். ‘ஹைட்ராலிக்’ மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி அவர் மீட்கப்பட்டார்.

சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் உயிரிழந்ததைக் குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவப் பணியாளர் உறுதிப்படுத்தினார்.

அதேவேளை, கவனக்குறைவாகவும் போதிய எச்சரிக்கையின்றியும் பேருந்தை இயக்கி உயிரிழப்பை ஏற்படுத்தியதற்காக 32 வயதுப் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

அந்தச் சம்பவம் குறித்த விசாரணை தொடருகிறது.

குவீன் ஸ்திரீட் பேருந்து முனையத்திலிருந்து மலேசியாவிற்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விபத்து காரணமாகப் பேருந்துச் சேவை எண் 170 தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் இரவு 9.19 மணிக்குத் தனது ஃபேஸ்புக் பதிவில் அறிவித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles