யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிராமத்தில் வீட்டை சுத்தம் செய்த போது இராணுவ அங்கி ஒன்று காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் இது குறித்து மருதங்கேணி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் அங்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் அது தொடர்பில் ஆய்வு செய்தனர். அது இராணுவத்தினர் வெடிபொருட்களை வைத்திருக்கும் அங்கி என்றும், அதில் நீண்ட நாள்பட்ட வெடிக்க கூடிய பொருட்கள் உள்ளதையும் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தின் உரிய அனுமதியை பெற்று குறித்த வெடிபொருளை அழிப்பதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
