கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் மரணம்

கிளிநொச்சி A9 வீதி, தொண்டமாநகர் பகுதியில் இன்று (12.08.2026) ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பாரஊர்தியின் ஒன்றோடொன்று மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

முன்னால் சென்ற பாரஊர்தி வீதியில் நிறுத்தப்பட்டு, அதில் இருந்த பொருட்களை இறக்குவதற்கு முற்பட்ட வேளையில், பின்னால் வந்த மற்றொரு பாரஊர்தி அதன்மீது பலமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் பாரஊர்தியின் உதவியாளராகப் பணியாற்றிய 21 வயதுடைய இளைஞரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles