கனடிய வர்த்தக நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு வந்தால் வரிகள் இல்லை – ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க – கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தது. இந்த வரிகள் 2027ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் 2 நாடுகளும் ஒன்றையொன்று குற்றம்சாட்டின. அமெரிக்காவுடன் மோதலுக்குத் தங்கள் நாடு தயாராக இருப்பதாக கனடா அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

புதிதாக விதிக்கப்பட்டு உள்ள வரிகளை தவிர்ப்பதற்காக, கனடிய நிறுவனங்கள் தங்கள் தலைமையகங்களையும் உற்பத்தி வசதிகளையும் அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமூகவலைதள பதிவில் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து கனடிய நிறுவனங்களும் உடனடியாக அமெரிக்காவிற்கு இடம் பெயரட்டும்.

அவற்றுள் பல, அமெரிக்காவின் முட்டாள்தனமான தலைமை காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறிய நிறுவனங்களாகும். நீங்கள் திரும்பி வரும்போது, ​​சுங்க வரிகள் எதுவும் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், கனடா அமெரிக்காவின் 2ஆவது பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்தபோதிலும், அது அமெரிக்காவின் மிக மோசமான வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அமெரிக்கப் பொருளாதாரம் கனடாவைவிடப் பல மடங்கு பெரியது. கனடாவின் ஏற்றுமதியில் சுமார் 70 சதவீதம் அமெரிக்காவிற்கே செல்கிறது.

அதே நேரத்தில் பல அமெரிக்க மாநிலங்களுக்கு மிக முக்கிய வாடிக்கையாளராக கனடா விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles