பிரதமர் மோடி கலந்துகொண்ட கூட்டத்தில் கைத்துப்பாக்கியுடன் நுழைந்தவர்கள் கைது

பிரதமர் நரேந்​திர மோடி​யின் நிகழ்ச்சி வளாகத்​தில் கைத் துப்பாக்கியுடன் நுழைந்தவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்​ளனர். அவர்​களிடம் தீவிர விசா​ரணை நடத்தப்பட்டு வருகிறது.

மகா​ராஷ்டிர தலைநகர் மும்​பை​யில் உள்ள ஜியோ வேர்ல்ட் பிளாசா மையத்​தில் சர்​வ​தேச பின்​டெக் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார்.

இந்த சூழலில் கடந்த திங்​கள்​கிழமை ஜியோ வேர்ல்ட் பிளாசா வளாகத்துக்கு 24 வயது இளைஞர் ஒரு​வர் சென்​றார். விழா நடைபெறும் மையத்​தின் நுழைவு வாயி​லில் காவல் பணி​யில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவரை தடுத்து நிறுத்​தினர்.

அப்​போது அந்த இளைஞர் தன்னை பிரதமர் அலு​வல​கத்​தின் அதிகாரி என்று கூறி​னார். அதற்கு ஆதா​ர​மாக அடை​யாள அட்டை ஒன்​றை​யும் காண்​பித்​தார். அவரோடு 50 வயது மதிக்​கத்​தக்க ஒருநபரும் வந்​திருந்​தார். அந்த நபரிடம் கைத்​துப்​பாக்கி இருந்​தது.

இதனால் சந்​தேகம் அடைந்த பொலிஸார் , இளைஞர் அளித்த அடை​யாள அட்​டையை தீவிர​மாக பரிசோ​தித்​தனர்.

அந்த அடையாள அட்டை போலி​யானது என்​பது தெரிய​வந்​தது. இதைத் தொடர்ந்து இரு​வரும் கைது செய்​யப்​பட்​டனர்.

முதல்​கட்ட விசா​ரணை​யில் பிரதமர் அலு​வலக அதி​காரி என்று கூறிய இளைஞரின் பெயர் ரோஹன் பிரேமல் பரிக் (24) என்​பதும், அவருடன் வந்த நபர் திலீப் ராஜா குண்டே (49) என்​பதும் தெரிய​வந்​தது.

திலீப் ராஜா வைத்​திருந்த கைத்​துப்​பாக்​கியை பரிசோதித்த​போது அதில் குண்​டு​கள் நிரப்​பப்​பட்டு இருந்​தமை கண்டுபிடிக்கப்பட்​டது. அவர்​களோடு தொடர்​புடைய 3ஆவது நபர் ஒரு​வரும் கைது செய்​யப்​பட்டு உள்​ளார். மூன்று பேரும் நீதிமன்றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டனர்.

அப்​போது பிரேமல் பரிக் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் ஒரு​வர் ஆஜராகி வாதிட்​டார். அவர் கூறிய​தாவது,

“பிஎஸ்சி கணிதத்​தில் பிரேமல் பரிக் இளநிலை பட்​டம் பெற்​றுள்​ளார். கடந்த 2024ஆம் ஆண்டு முதலே அவர் தனிப்​பட்ட முறை​யில் பாது​காவலரை நியமித்து இருக்​கிறார். அந்த பாது​காவலரிடம் உரிமம் பெற்ற கைத்​துப்​பாக்கி உள்​ளது.

அண்​மை​யில் தருண் குமார் என்​பவர் பிரேமலை அணுகி​னார். பிரதமர் அலு​வலக அதி​காரிக்​கான பணி ஆணையை அவரே வழங்​கி​னார்.

மும்​பை​யில் பிரதமர் மோடி பங்​கேற்ற நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க தருண் குமாரே உத்​தர​விட்​டார். இதன்​பேரிலேயே பிரேமல் பரிக், ஜியோ வோர்ல்ட் பிளாசா மையத்​துக்கு சென்​றார். அவரது பாது​காவலரும் உடன் சென்​றார். இவ்​வாறு மூத்த வழக்கறிஞர் வாதிட்​டார்.

இந்த வாதத்​துக்கு மும்பை பொலிஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கைது செய்​யப்​பட்ட 3 பேரிட​மும் தீவிர விசாரணை நடத்த வேண்​டும் என்று அவர்​கள் கோரினர். இதைத் தொடர்ந்து நீதி​மன்ற அனு​ம​தி​யுடன் 3 பேரும் பொலீஸ் காவலில் எடுக்​கப்​பட்​டனர். அவர்​களிடம் தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

பிரதமர் அலு​வலக அதி​காரிக்​கான போலி அடை​யாள அட்டை எங்கு தயாரிக்​கப்​பட்​டது? பிரதமர் மோடி பங்​கேற்ற ஜியோ வேர்ல்டு பிளாசா வளாகத்​துக்​குள் பிரேமல் எவ்​வாறு நுழைந்​தார்? கைத்​துப்​பாக்கி வைத்​திருந்த பாது​காவலர் உள்ளே நுழைந்​தது எப்​படி?

இவர்​களது பின்​னணி​யில் உள்ள கும்​பல் யார்? பிரதமர் மோடி மீது தாக்​குதல் நடத்த சதித் திட்​டம் தீட்​டப்​பட்​டிருந்​ததா என்பது குறித்து மும்​பை குற்​றப்​பிரிவு பொலிஸார் தீவிர விசாரணை நடத்​தி வருகின்​றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles