அனோஜனின் விடுதலைக்காக அமெரிக்க, இந்தியத் தரப்புகளுடன் தமிழரசின் எம்.பிக்கள் சந்திப்பு!

Eight professionals in suits stand in a lobby, with flags behind them (U.S. flag and Sri Lankan flag) and sunburst art visible in the background.

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்கான இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் கொழும்பிலுள்ள இந்திய மற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு இணங்க, கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் தலைமையில் சண்முகம் குகதாசன், மருத்துவர் சத்தியலிங்கம், கோடீஸ்வரன், சிறிநேசன், சிறிநாத் மற்றும் ரவிகரன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தச் சந்திப்புகளில் கலந்துகொண்டனர்.

இதற்கமைய, நேற்றுப் புதன்கிழமை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் அன்ரனி வி. பிரினோட் ஆகியோரைத் தனித்தனியாகச் அவர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசர தேவைகள் குறித்தும், அவரை மீட்கும் விவகாரத்தில் தூதரக ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

சம்பந்தப்பட்ட அனைத்துலகத் தரப்புகளுடனும் ஒருங்கிணைந்து உரிய இராஜதந்திர அழுத்தங்களையும் முயற்சிகளையும் முன்னெடுப்பதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது தமிழரசுக் கட்சியின்  உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles