கொட்டும் மழையிலும் 22 இற்கு எதிராக கொழும்பில் பெரும் போராட்டம்

Crowd of protesters at a sunny rally, many holding colorful umbrellas; a man raises his arm while police stand at the front.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக கொட்டும் மழைக்கு மத்தியிலும் கொழும்பில் பெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பு, பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் (நாடாளுமன்றத்துக்கு செல்லும் நுழைவாயில் வளாகம்) இப்போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.

பெருமளவானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles